விஜய் சேதுபதியின் 'ஏஸ்' பட டிரெய்லர் வெளியீடு...!

விஜய் சேதுபதி நடித்த ஏஸ் படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.
விஜய் சேதுபதி - ருக்மிணி வசந்த் நடித்துள்ள திரைப்படம் ஏஸ். விஜய் சேதுபதி மற்றும் கவுதம் கார்த்திக் இணைந்து நடித்த ’ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ திரைப்படத்தை இயக்கிய ஆறுமுககுமார் இப்படத்தை இயக்கியுள்ளார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் டீசர் சில மாதங்களுக்கு முன் வெளியானது. படத்தில் யோகி பாபு, பப்லு பிரித்விராஜ், பி.எஸ் அவினாஷ், திவ்யா பிள்ளை மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார்.
Happy to Launch the trailer of #ACE. All the very best to my dear brother @vijaysethuoffl and the entire team.
— Silambarasan TR (@SilambarasanTR_) May 11, 2025
🔗https://t.co/vYnlgLAM6j#ACETrailer #ACEFromMay23@rukminitweets @7CsPvtPte @Aaru_Dir @iYogiBabu @justin_tunes @samcsmusic @shreyaghosal @KapilKapilan_… pic.twitter.com/N1vQodl6bk
ஏஸ் திரைப்படம் வரும் மே 23 ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் படத்தின் டிரெய்லரை நடிகர் சிம்பு அவரது எக்ஸ் தளத்தில் வெளியிட்டார். டிரெய்லரில் சிவகார்த்திகேயன் வசனம் இடம் பெற்றது கூடுதல் சிறப்பாக அமைந்துள்ளது.