சூதாட்டத்தின் பின்னணியில் உருவாகியுள்ள விஜய் சேதுபதி படம்

சூதாட்டத்தின் பின்னணியில் உருவாகியுள்ள விஜய் சேதுபதி படம்

கடந்த 2018-ஆம் ஆண்டு விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான திரைப்படம் ‘ஒரு நல்ல நாள் பார்த்து சொல்கிறேன்’. இந்த படத்தை பி.ஆறுமுக குமார் இயக்கியிருந்தார். தற்போது மீண்டும் அவரின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து வருகிறார். விஜய் சேதுபதியின் 51வது படமாக உருவாகும் இந்த படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இந்த படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து யோகிபாபுவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவர்களுடன் ருக்மணி வசந்த், பி.எஸ்.அவினாஷ், திவ்யா பிள்ளை, பப்லு, ராஜ்குமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தில் கரண் பகதூர் ராவத் ஒளிப்பதிவாளராகவும், ஜஸ்டின் பிரபாகரன் இசையமைப்பாளராகவும் பணியாற்றுக்கின்றனர்.

சூதாட்டத்தின் பின்னணியில் உருவாகியுள்ள விஜய் சேதுபதி படம்

இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் நடைபெற்று முடிந்தது. முழு படப்பிடிப்பும் மலேசியாவில் நடைபெற்றது. இந்நிலையில், திரைப்படம் குறித்து பேசிய இயக்குநர், சூதாட்டத்தை மையப்படுத்தி படத்தை உருவாக்கியுள்ளதாக கூறினார். 
 

Share this story