விஜய் சேதுபதியின் 'மகாராஜா' திரைப்படம் புதிய சாதனை !

maharaja

விஜய் சேதுபதியின் 50-வது படம் ‘மகாராஜா’. இதை நித்திலன் சாமிநாதன் இயக்கியுள்ளார். கடந்த வருடம் ஜூன் மாதம் வெளியாகி வரவேற்பைப் பெற்ற இந்தப் படம் ரூ.100 கோடியை தாண்டி வசூலித்தது. இந்தப் படம் சீன மொழியில் டப் செய்யப்பட்டு கடந்த நவம்பர் மாதம் அங்கு வெளியானது. அங்குள்ள ரசிகர்களையும் கவர்ந்த மகாராஜா, 2018-ம் வருடத்துக்குப் பிறகு அதிக வசூலை ஈட்டிய இந்தியப் படமாக மாறியிருக்கிறது. ரூ.91.55 கோடியை இந்தப் படம் சீனாவில் வசூலித்துள்ளது. ஆமீர்கானின் 3 இடியட்ஸ், தங்கல் ஆகிய படங்கள் அங்கு அதிகம் வசூலித்த இந்திய படங்களாக உள்ளன. 

Share this story