விஜய் சேதுபதியின் 'மகாராஜா' திரைப்படம் 100வது நாள் கொண்டாட்டம்!
'குரங்கு பொம்மை' படத்தின் இயக்குநர் நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில், விஜய் சேதுபதி கதாநாயகனாக நடித்து அவரது 50வது திரைப்படமாக கடந்த ஜூன் மாதம் திரையரங்குகளில் வெளியான திரைப்படம் தான் 'மகாராஜா'. இந்த படத்தில் விஜய் சேதுபதியுடன், அபிராமி, முனிஷ்காந்த், நட்டி, சிங்கம் புலி, அனுராக் காஷ்யப் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். 'மகாராஜா' திரையரங்குகளில் வெளியானது முதல் அனைவரது பாராட்டையும் பெற்றது.அதிலும் குறிப்பாக, ரஜினிகாந்த், விஜய், கமல்ஹாசன் என தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்கள் அனைவரும் மகாராஜா திரைப்படத்தையும், அப்படத்தின் இயக்குநர் நித்திலன் சுவாமிநாதன், நடிகர் விஜய் சேதுபதி உள்ளிட்ட படக் குழுவினரை பாராட்டினர் என்பது குறிப்பிடத்தகுந்தது.
பெரிய நடிகர்களின் 50வது படங்கள் எதிர்பார்த்த அளவு வசூல் ரீதியாக வெற்றியை பெறுவது என்பது ஒரு சில படங்களுக்கு மட்டுமே சாத்தியமாகியுள்ளது. அந்த வரிசையில், விஜய் சேதுபதியின் 50வது படமான மகாராஜா 100 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.அதுமட்டு இன்றி ஓடிடி தளத்தில் வெளியாகி, அங்கேயும் மிகப் பெரிய வெற்றியை பெற்றுள்ள மகாராஜா, உலகளாவிய தமிழ் சினிமா ரசிகர்களின் மத்தியில் பாராட்டுக்களை குவித்ததை தாண்டி, வழக்கமான பழிவாங்கும் கதையாக அல்லாது உலகத் தரமான திரைக்கதை மூலம் மிக சிறந்த படைப்பாக உருவாக்கியிருந்த இயக்குநர் நித்திலன் சாமிநாதன் என்று அனைத்து தரப்பிலும் தெரிவிக்கப்பட்டது.
#Maharaja#VJS50@VijaySethuOffl @PassionStudios_ @TheRoute pic.twitter.com/yXHWmWppCg
— Nithilan Saminathan (@Dir_Nithilan) September 21, 2024
null
மேலும், விஜய் சேதுபதியின் இயல்பான நடிப்பும் பாராட்டப்பட்டது. இதனையெல்லாம் தாண்டி சிங்கம் புலியின் கதாபாத்திரம் யாரும் எதிர்பார்க்காத வகையில், படம் பார்த்தவர்களை கோபம் கொள்ளும் அளவுக்கு தனது கதா பாதிரத்தை அவ்வளவு இயல்பாக வெளிப்படுத்தியிருந்தார் என சிங்கம் புலி பாராட்டப்பட்டார்.இதுமட்டும் அல்லாது, படத்தில் அத்தனை கதாபாத்திரங்களும் தங்களது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினர் எனவும், தமிழ் சினிமாவில் ஒரு மைல் கல் இந்த படம் எனவும் அனைவராலும் சொல்லப்பட்டது. இந்த நிலையில், தற்போது இப்படம் நூறாவது நாளை கொண்டாடுகிறது.
அந்த வகையில், நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு தமிழ்ப் படம் 100வது நாள் வெற்றியை ருசிக்கிறது என்றும், இந்த வருடத்தில் சிறந்த படங்களில் ஒன்றாக விளங்கும் இப்படம் நடிகர் விஜய் சேதுபதிக்கும் திருப்புமுனை படமாக அமைந்துள்ளது என்றும் குறிப்பிட்டு, மகாராஜா படத்தின் 100வது நாள் வெற்றியை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர்.