சீனாவில் கொடி கட்டி பறக்கும் விஜய் சேதுபதியின் 'மகாராஜா'

vijay sethupathi

இயக்குநர் நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்த 'மகாராஜா' திரைப்படம் ஜூன் மாதம் வெளியாகி ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூலித்து இந்தாண்டின் வெற்றிப்படமானது. ஓடிடி தளத்திலும் வெளியாகி உலகம் முழுக்க மக்களால் இப்படம் அங்கீகரிக்கப்பட்டது. இதனிடையே ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற 'மகாராஜா' திரைப்படத்தை இந்தியில் ரீமேக் செய்ய உள்ளதாகவும் கூறப்பட்டது.இதனிடையே 'மகாராஜா' திரைப்படத்தை சீன மொழியில் டப்பிங் செய்து அலிபாபா குழுமம் சீனாவில் வெளியிட்டது. மேலும் இப்படம் 40,000 திரைகளில் வெளியானது.

maharaja

இந்திய அளவில் ரசிகர்களை கவர்ந்த இந்த படம் தற்போது சீன ரசிகர்களின் வரவேற்பை பெற்று கொண்டாடப்பட்டு வருகிறது.திரைப்படம் சீனாவில் வெளியாகி இந்த படத்தின் வசூல் மிகப்பெரிய அளவில் அமைந்துள்ளது. 3 தினங்களிலேயே 26 கோடி ரூபாய் வசூலை எட்டியது. தற்பொழுது சீனாவில் மட்டும் 75 கோடி ரூபாயை தாண்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இப்படம் சீனாவிலும் 100 கோடி ரூபாயை எட்டும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. சீனாவில் வெளியாகி வசூலில் சாதனை படைத்த கோலிவுட் படமான சங்கரின் 2பாயிண்ட்ஓ (2.O) வசூல் சாதனையை 'மகாராஜா' முறியடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Share this story