மீண்டும் ரிலீசாகும் விஜய் சேதுபதியின் ‘மகாராஜா’..! எங்கு தெரியுமா..?
1731653210168
விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான மகாராஜா திரைப்படம் சீனாவில் வெளியாக இருக்கிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகராக நடிகர் விஜய் சேதுபதி வலம் வருகிறார். அந்த வகையில் இவரது நடிப்பில் தற்போது விடுதலை 2, ஏஸ், ட்ரெயின் போன்ற படங்கள் உருவாகி இருக்கின்றன. இதற்கிடையில் கடந்த ஜூன் 14ஆம் தேதி விஜய் சேதுபதி நடிப்பில் மகாராஜா எனும் திரைப்படம் வெளியானது. இந்த படத்தினை பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்க குரங்கு பொம்மை பட இயக்குனர் நித்திலன் சாமிநாதன் இயக்கியிருந்தார். வித்தியாசமான கதைக்களத்தில் வெளியான இந்த படம் பல்வேறு தரப்பினரிடையே பாராட்டுகளை பெற்று கிட்டத்தட்ட 100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது. அதைத்தொடர்ந்து ஓடிடியிலும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதாவது ஹீரோவை விட திரைக்கதைக்கு முக்கியத்துவம் கொடுத்திருந்தார் நித்திலன் சாமிநாதன். எனவே இன்று வரையிலும் இந்த படம் பேசப்பட்டு வருகிறது. இது ஒரு பக்கம் இருக்க, மற்றொரு பக்கம் இந்தி மொழியில் இந்த படத்தை ரீமேக் செய்ய இருப்பதாகவும் அதில் நடிகர் அமீர் கான் ஹீரோவாக நடிக்கப் போகிறார் என்றும் செய்திகள் வெளியானது. மேலும் மகாராஜா திரைப்படம் வருகின்ற நவம்பர் 29ஆம் தேதி சீனாவில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே சீனாவிலும் வெளியாகி இந்த படம் அதிக வசூலை வாரிக் குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Maharaja will be released in China on 29 November by @AlibabaGroup #Maharaja#VJS50@VijaySethuOffl @PassionStudios_ @TheRoute pic.twitter.com/LZawPK9zy3
— Nithilan Saminathan (@Dir_Nithilan) November 15, 2024