பாண்டிராஜ் - விஜய் சேதுபதி படத்தின் டைட்டில் டீசர் ரிலீஸ்...!

பாண்டிராஜ் - விஜய் சேதுபதி கூட்டணியில் உருவான படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி உள்ளது.
'பசங்க', 'வம்சம்', 'மெரினா', 'கடைக்குட்டி சிங்கம்”, ’நம்ம வீட்டு பிள்ளை', ’எதற்கும் துணிந்தவன்' உள்ளிட்ட படங்களை இயக்கியவர் பாண்டிராஜ். இவர் விஜய் சேதுபதி, நித்யா மேனன், யோகி பாபு உள்ளிட்டோரை வைத்து புதிய படத்தை இயக்கி உள்ளார்.
@pandiraj_dir @MenenNithya @Music_Santhosh @SathyaJyothi @thinkmusicindia @mynnasukumar @PradeepERagav @Veerasamar @onlynikilhttps://t.co/Lxjk0ezqEv pic.twitter.com/6w0ydivZOV
— VijaySethupathi (@VijaySethuOffl) May 3, 2025
இப்படத்தை சத்யஜோதி ஃபிலிம் தயாரிக்கிறது.விஜய் சேதுபதியின் 52 வது படமாக உருவாகி உள்ள இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் கடந்த மாதம் நிறைவு பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், படத்தின் டைட்டில் டீசர் தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி, விஜேஎஸ் 52 படத்திற்கு ' தலைவன் தலைவி என பெயர் வைக்கப்பட்டுள்ளது.