விஜய் சேதுபதி நடித்துள்ள ஏஸ் படத்தின் 2வது பாடல் ரிலீஸ்...!

விஜய் சேதுபதி நடித்துள்ள ACE படத்தின் 2 வது பாடல் வெளியாகி உள்ளது.
விஜய் சேதுபதியின் 50 – வது திரைப்படமான மகாராஜா மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது. இதை தொடர்ந்து விஜய் சேதுபதி அடுத்ததாக ஏஸ் திரைப்படத்தில் நடித்துள்ளார்.இப்படத்தில் கன்னட நடிகையான ருக்மிணி வசந்த் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தை ஆறுமுககுமார் இயக்கி தயாரித்துள்ளார்.இதற்கு முன் ஆறுமுககுமார் விஜய் சேதுபதி மற்றும் கவுதம் கார்த்திக் இணைந்து நடித்த 'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்' திரைப்படத்தை இயக்கினார். படத்தில் யோகி பாபு, பப்லு பிரித்விராஜ், பி.எஸ் அவினாஷ், திவ்யா பிள்ளை மற்றும் பலர் நடித்துள்ளனர். படத்தின் டிரெய்லரை அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
Second Single from #ACE - Ace Anthem is Out Now ❤🔥
— VijaySethupathi (@VijaySethuOffl) May 20, 2025
▶️https://t.co/fO2JueoX4K
#ACEFromMay23@rukminitweets @7CsPvtPte @Aaru_Dir @iYogiBabu @justin_tunes @samcsmusic @shreyaghosal @KapilKapilan_#KaranBRawat @andrews_avinash @rajNKPK @DivyaPillaioffl @Denes_Astro @yogeshdir… pic.twitter.com/x3Fso2Cwq2
திரைப்படம் வரும் மே 23 ஆம் தேதி வெளியாகிறது. படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழை வழங்கியுள்ளது. திரைப்படத்தின் நேர அளவு 2 மணி நேரம் 36 நிமிடங்களாக முடிவு செய்யப்பட்டுள்ளது. இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். படத்தின் பின்னணி இசையை சாம் சி.எஸ் மேற்கொண்டுள்ளார்.ஏற்கனவே இப்படத்தில் இருந்து உருகுதே என்னும் பாடகி வெளியாகி ஹிட் ஆனது. தற்போது ஏஸ் anthem வெளியாகி உள்ளது.