5 மில்லியன் பார்வைகளை கடந்த விஜய் சேதுபதியின் 'உருகுது உருகுது' பாடல்...!

விஜய் சேதுபதி நடித்துள்ள `ஏஸ்' படத்தின் ‘உருகுது உருகுது” பாடல் இணையத்தில் தி மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது.
ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் படத்தின் இயக்குனர் ஆறுமுக குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள திரைப்படம் ’ஏஸ்' . இப்படத்தின் கதைக்களம் மலேசியா என்பதால், கடந்த ஆண்டு இப்படத்தின் படப்பிடிப்பு மலேசியாவில் தொடங்கியது. மொத்த படப்பிடிப்பும் மலேசியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது. இப்படத்தில் யோகி பாபு, ருக்மிணி வசந்த் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மேலும் ஜஸ்டின் பிரபாகரன் படத்திற்கு இசை அமைத்திருக்கிறார்.
All charts busted and 5M+ vibes locked for #UrugudhuUrugudhu from #ACE ❤️🔥
— 7Cs Entertaintment (@7CsPvtPte) March 29, 2025
Keep the loop going! 🎧https://t.co/4g6ohoEHyd
🎵 @justin_tunes
🎙️ @shreyaghosal & @KapilKapilan_
✒️ @kavithamarai @VijaySethuOffl @rukminitweets @7CsPvtPte @Aaru_Dir @iYogiBabu pic.twitter.com/ypAys03Gbm
விஜய் சேதுபதியின் 51-வது படமான ’ஏஸ்' இறுதிக்கட்ட பணிகளில் உள்ள நிலையில், அண்மையில் 'உருகுது உருகுது' எனத்தொடங்கும் முதல் பாடல் வெளியானது. ஜஸ்டின் பிராபகரன் இசையமைப்பில் கவிஞர் தாமரை எழுதிய இப்பாடலை கபில் கபிலன், ஷ்ரேயா கோஷல் இணைந்து பாடியுள்ளனர். தற்போது இணையத்தில் வைரலாக இப்பாடல் 5 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது.