விஜய் சேதுபதியின் ‘டிஎஸ்பி’ படத்திலிருந்து விலகியதா சன் பிக்சர்ஸ் ?... வெளியானது புதிய தகவல் !

dsp

விஜய் சேதுபதியின் ‘டிஎஸ்பி’ படத்திலிருந்து சன் பிக்சர்ஸ் விலகியதற்கான தகவல் வெளியாகியுள்ளது. 

‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ரஜினி முருகன், சீமராஜா, எம்.ஜி.ஆர் மகன் ஆகிய படங்களுக்கு பிறகு பொன்ராம் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் திரைப்படம் ‘டிஎஸ்பி’. இந்த படத்தில் அனு க்ரீத்தி மற்றும் பிக்பாஸ் ஷிவானி ஆகிய இரு ஹீரோயின்கள் நடித்துள்ளனர். ‘குக் வித் கோமாளி’  புகழ் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 

dsp

போலீஸ் கதைக்களம் கொண்ட இப்படத்தில் வாஸ்கோடகாமா என்ற ஐபிஎஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார். இந்த படத்திற்கு டி இமான் இசையமைத்து வருகிறார். சமீபத்தில் இந்த படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. அதில் புல்லட்டில் கெத்தான போலீசாக வரும் புகைப்படம் இடம்பெற்றது. 

dsp

தற்போது இப்படத்தின் தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் சமீபத்தில் வெளியான ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டரில் சன் பிக்சர்ஸ் பெயர் இடம்பெறவில்லை. அதற்கு பதிலாக கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் இப்படத்தை தயாரிப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் படத்திலிருந்து சன் பிக்சர்ஸ் விலகிவிட்டதா என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

இது குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது. பொதுவாக நேரடியாக தயாரிக்கும் திரைப்படங்களுக்கு மட்டுமே சன் பிக்சர்ஸ் பெயர் இடம்பெறுமாம். இந்த படம் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் மூலம் தயாரிப்பதால் சன் பிக்சர்ஸ் பெயர் இடம்பெறவில்லை. இந்த படத்தை டிசம்பர் மாதம் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

 

Share this story