சர்வதேச இந்தியத் திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட விஜய் சேதுபதியின் படம்.

photo

கோவாவில் நடந்து வரும் 54வது சர்வதேச இந்தியத் திரைப்பட விழாவில் நடிகர் விஜய் சேதுபதியின் ‘காந்தி டாக்ஸ்’ படம் திரையிடப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் நடக்கும் சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் பல்வேறு மொழிப்படங்கள், ஆவணப்படங்கள், குறும்படங்கள் ஆகியவை திரையிடப்படுவது வழக்கம்.அந்த அவகையில் இந்த ஆண்டு தமிழ் மொழி சார்பாக பொன்னியின் செல்வன், விடுதலை ஆகிய படங்கள் திரையிடப்பட உள்ளனர். நவம்பர் 20 முதல் 28ஆம் தேதி வரை நடக்கும் இந்த விழாவில் பலர் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டுள்ளனர். நடிகர் விஜய் சேதுபதிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில் அவரது நடிப்பில் தயாரான காந்தி டாக்ஸ் படம் திரையிடப்பட்டுள்ளது. இந்த படத்தை கிஷோர் பாண்டுரங் இயக்குயுள்ளார். வசனமே இல்லாத இந்த படத்திற்கு இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

Share this story