புது லுக்கில் பட்டையை கிளப்பும் ‘விஜய் சேதுபதி’.
நடிகர் விஜய் சேதுபதியின் புது லுக் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.
வில்லன், ஹீரோ, குணச்சித்திர கதாப்பாத்திரம் என எந்த ரோல் கொடுத்தாலும் அடித்து தூள் கிளப்பும் நடிகர் விஜய் சேதுபதி. இவர் தற்போது இயக்குநர் மிஸ்கின் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார். அந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு வில்லனாக நடிகர் ஜெயராம் நடிக்க உள்ளார். இந்த படத்தின் லுக்கில்தான் தற்போது விஜய்சேதுபதி உள்ளார். மெல்லிய மீசையுடன் ரெட்ரோ கெட்டப்பில் உள்ளார் விஜய் சேதுபதி.
இவர் நடிகரும், இயக்குநருமான அமீரின் புதிய கடையான ‘The Law Cafe’ எனும் கடையின் திறப்பு விழாவிற்கு வந்த போது எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தை கலக்கி வருகிறது. பலரும் அந்த கெட்டப்பை பார்த்து ‘இந்த மனுஷனுக்கு தான்யா…எல்லா கெட்டப்பும் சூட் ஆகுது’ என கமெண்ட் அடித்து வருகின்றனர்.