“முதலில் இந்த கேள்வியை ஏன் கேட்கிறீர்கள்?” – தடாலடியாக தாக்கிய ‘விஜய் சேதுபதி’!..

photo

முதலமைச்சர் ஸ்டாலினின் 70-வது பிறந்தநாளை முன்னிட்டு 'எங்கள் முதல்வர்; எங்கள் பெருமை' என்ற தலைப்பில் புகைப்படக் கண்காட்சி சென்னையை தொடர்ந்து மதிரையிலும் நடந்து வருகிறது. இந்தக் கண்காட்சியை திரைப்பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் பார்த்து  வருகின்றனர்.

photo

இந்த நிலையில் வடிவேலு, சூரியை தொடர்ந்து நேற்று மாலை விஜய் சேதுபதியும் அந்த கண்காட்சியை பார்வையிட்டார். அப்போது அவர் செய்தியாளர்கள் பல கேள்விகளுக்கு பதிலளித்து பேசினார். அதில் அவர் பேசியதாவது, “சிறந்த கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கக்கூடிய நீங்கள் முதல்வர் வேடத்தில் நடிக்க வாய்ப்புள்ளதா?” எனக் கேட்கப்பட்ட கேள்விக்கு "முதலில் இந்த கேள்வியை ஏன் கேட்கிறீர்கள்என தடாலடியாக பதிலளித்துள்ளார்.

photo

தொடர்ந்து கூறிய அவர் எனக்கு முதல்வர் மேல ஏற்கனவே மரியாதை இருக்கு. இளைஞரணி முதன்முதலில் திமுக-வில் தான் தொடங்கப்பட்டது என்பது எனக்கு ஆச்சரியமான தகவல். இதற்கு முன்பு இது தெரியாது. வாரிசு என்கிற காரணத்தால் அவர் வந்தார் என்று பலரும் சொல்வார்கள். என தெரிவித்தார்.  மேலும் கூறிய அவர், ஒரு படம் எடுப்பது சாதாரணமான விஷயம் இல்லை. அதை நீங்கள் எளிதாக கேட்கிறீர்கள். எப்படியோ கொண்டு போய் மக்களிடத்தில் சேர்க்கும் எண்ணத்தில் தான் ஒரு படம் எடுக்கிறார்கள். அது என் கையில் இல்லை. அது வருவதைப் பொறுத்துத் தான் இருக்கிறது" என்றார்

Share this story