தளபதி விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் படத்தின் படப்பிடிப்பு எப்போது?

Jason sanjay


நடிகர் விஜய், தமிழ் சினிமாவில் பல வருடங்களாக முன்னணி நாயகனாக கலக்கி வருகிறார்.ஆனால் அவர் நடிப்பில் இன்னும் 2 புதிய படங்களே ரிலீஸ் ஆகும், அதன்பின் படங்கள் வராது என்று நினைக்கும் போது ரசிகர்களுக்கு சோகமாக தான் உள்ளது. அதேசமயம் அவர் அரசியலுக்கு  வருகிறார் என்பதால் ரசிகர்களுக்கு சந்தோஷமும் தான்.இப்போது கோட் படத்தின் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடைபெற்று வருகிறது. அடுத்து தனது கடைசி படத்திற்காக யாருடன் கூட்டணி அமைக்கிறார், தயாரிப்பாளர் யார் என்பது தெரியவில்லை.விஜய் சினிமாவை விட்டு விலக முடிவெடுத்துள்ள நிலையில் அவரது மகன் ஜேசன் சஞ்சய் சினிமாவிற்குள் நுழைகிறார்.

Lyca

படிக்கும் போதே நிறைய சில குறும்படங்கள் இயக்கிவந்த ஜேசன் சஞ்சய், தமிழ் சினிமாவில் இயக்குனர் அவதாரம் எடுக்க இருக்கிறார்.அவரது முதல் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறார்கள். இந்தியன் 2 மற்றும் விடாமுயற்சி படத்தின் வேலைகளில் பிஸியாக இருப்பதால் சஞ்சய் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு தள்ளிப்போவதாக கூறப்பட்டன.

தற்போது சஞ்சய் தனது முதல் படத்தின் வேலைகளை தொடங்கி விட்டதாகவும், விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. மற்ற நடிகர்கள் விவரம் முறையான அறிவிப்புடன் வெளியாகும் என தெரிகிறது. 

Share this story