GOAT படத்தின் `ஸ்பார்க்' பாடலின் புதிய போஸ்டர் வெளியானது
நடிகர் விஜய், இயக்குநர் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகி வரும் படம் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (தி கோட்). ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் பிரசாந்த், பிரபு தேவா, அஜ்மல், மீனாட்சி சௌத்ரி மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்று பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன. இந்த படத்தில் இடம் பெற்றுள்ள இரண்டு பாடல்கள் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இப்பாடலிற்கு ஸ்பார்க் என தலைப்பிட்டுள்ளனர். பாடலின் லிரிக் வீடியோவை இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இப்பாடலை யுவன் ஷங்கர் ராஜா மற்றும் விருஷா பாலி இணைந்து பாடியுள்ளனர். பாடலிற்கு கங்கை அமரன் பாடல் வரிகளை எழுதியுள்ளார். பாடலில் விஜய் மற்றும் மீனாட்சி சவுத்ரி இணைந்து நடனமாடியுள்ளனர். இந்நிலையில் இந்த பாடலுக்கான 2 ஆவது போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இதில் விஜய் மிகவும் இளம் தோற்றத்தில் ஸ்டைலிஷாகவுள்ளார். இதனால் இப்பாடலின் மீது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
Just 6 hours to go for #Spark to light up your screens 💥
— venkat prabhu (@vp_offl) August 3, 2024
Releasing Today 6 PM 🔥
Vocal by @thisisysr | @Singer_vrusha 🎤@actorvijay Sir
A @thisisysr Magical 🎼
A @gangaiamaren | @ramjowrites lyrical ✍🏼
A @vp_offl Hero#TheGreatestOfAllTime#KalpathiSAghoram… pic.twitter.com/W2xwoIKzzw