இறுதிக்கட்டத்தில் விஜய்யின் 'லியோ'... புதிய அப்டேட்

leo

விஜய் நடிப்பில் உருவாகும் 'லியோ' திரைப்படம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

 விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் வெறித்தனமாக உருவாகிறது ‘லியோ’. ஆயுதப்பூஜையையொட்டி வரும் அக்டோபர் மாதம் 19-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பை திட்டமிட்டபடி முடிக்க இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வேகமாக பணியாற்றி வருகிறார். 

leo

முதற்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் தொடங்கிய நிலையில் அங்கு விஜய், திரிஷா, மிஷ்கின், கௌதம் மேனன், சஞ்சய் தத் உள்ளிட்டோர் நடிக்கும் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது. கடுமையான குளிரிலும் சுமார் 500-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் இந்த படத்திற்காக பணியாற்றியுள்ளனர். மொத்தம் 50 நாட்களுக்கு மேல் படப்பிடிப்பு நடைபெற்ற நிலையில் கடந்த மாதம் இந்த படப்பிடிப்பு நிறைவுபெற்றது.

இதையடுத்து இப்படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த படப்பிடிப்பில் விஜய்யோடும் இணைந்து நடிகர் அர்ஜுனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இப்படத்தின் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னையை அடுத்து ஹைதராபாத்தில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது. கடைசியாக பாடல் படப்பிடிப்பதற்காக படக்குழு வெளிநாடு செல்ல உள்ளது. அத்துடன் அனைத்து படப்பிடிப்பும் நிறைவு பெற்று தயாரிப்பு பணிகள் தொடங்கும் என கூறப்படுகிறது. 

Share this story