'வாரிசு' கொண்டாடப்பட வேண்டிய படமா ?... முதற்கட்ட ட்விட்டர் விமர்சனம் !

varisu

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'வாரிசு' படத்தின் ட்விட்டர் விமர்சனத்தை பார்க்கலாம். 

தெலுங்கு இயக்குனர் வம்ஷி படைப்பள்ளி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘வாரிசு’ படத்தில் நடிகர் விஜய் நடித்துள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் உருவாகியுள்ள இப்படத்தை தில் ராஜூவின் நிறுவனம் தயாரித்துள்ளார். இந்த படம் நாளை அதிகாலை 4 மணிக்கு திரையரங்கில் வெளியாகியுள்ளது. 

மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படத்தின் சிறப்புக்காட்சி சற்று நேரத்திற்கு முன் பிரபல திரையரங்கில் திரையிடப்பட்டது.  இதில் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் கலந்துக்கொண்டு படத்தை பார்த்தனர். 

இந்நிலையில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் ட்விட்டர் விமர்சனம் வெளியாகியுள்ளது. 

 https://twitter.com/sekartweets/status/1612852526998749184?t=myUb-93maCHIlObuzXak4g&s=19

வாரிசு படத்தின் முதல் பாகம் தெறியாக இருக்கிறது. விஜய்யின் நடிப்பு மற்றும் ஸ்டைல் தீயாய் உள்ளது. இந்த படம் உலகளவில் கண்டிப்பாக உச்சத்தை தொடும். இயக்குனர் வம்சி, அழகான குடும்ப மற்றும் பொழுதுபோக்கு படத்தை கொடுத்துள்ளார். படத்திற்கு சிறந்த இசையை இசையமைப்பாளர் தமன் கொடுத்துள்ளார். 

 

விஜய்யின் அறிமுக காட்சியின் என் கண்களை மூட முடியவில்லை. யோகிபாபுடனான காமெடி காட்சிகள் சிறப்பாக உள்ளது. பாடல்கள், டான்ஸ், எமோஷன் ஆகியவைகள் மாஸாக உள்ளது. விஜய்க்கு சரியான ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார்.  தி  பாஸ் ரிட்டர்ன்ஸ்.. வெறித்தனமாக இடைவெளை. 


 

Share this story