மலைக்க வைக்கும் சாதனை... 200 கோடி வசூலித்த 'வாரிசு'... உற்சாகமான ரசிகர்கள் !

varisu

 விஜய்யின் 'வாரிசு' திரைப்படம் 200 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது. 

ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன் நிறுவனம் சார்பில் விஜய் நடிப்பில் உருவான திரைப்படம் 'வாரிசு'. தெலுங்கு இயக்குனர் வம்சி படைப்பள்ளி இயக்கத்தில் உருவான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. கடந்த 11-ஆம் தேதி பொங்கலையொட்டி வெளியான இப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். 

varisu

விஜய்யின் வழக்கமான ஆக்ஷன் படமாக இல்லாமல் இந்த படம் குடும்ப பின்னணி கொண்டு உருவாகி வெளியாகியுள்ளது. இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரகாஷ்ராஜ், யோகிபாபு, ஜெயசுதா, ஷ்யாம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்‌.  தமன் இசையில் இந்த படத்தின் பாடல்களும் சூப்பர் ஹிட்டடித்துள்ளது. 

இந்த படம் முதல் நாளில் 20 கோடிக்கு மேல் வசூலித்திருந்தது. இதையடுத்து 5 நாளில் 150 கோடி வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இப்படம் 7 நாளில் 200 கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்துள்ளது. இதை அதிகாரப்பூர்வ பட தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இதற்கிடையே 'வாரிசு' எதிர்மறை விமர்சனங்களை பெற்று வருவதாக கூறப்படும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

Share this story