துபாயும் இல்ல.. மலேசியாவும் இல்ல.. ‘லியோ’ ஆடியோ லாஞ்ச் எங்கு தெரியுமா ?

vijay

‘லியோ’ படத்தின் ஆடியோ லாஞ்ச் குறித்த முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் 'லியோ' திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்திற்கு அனிரூத் இசையமைத்து வருகிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக திரிஷா கதாநாயகியாக நடித்து வருகிறார். இவர்களுடன் சஞ்சய் தத், கௌதம் மேனன், மிஷ்கின், அர்ஜூன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். 

vijay

இந்த படம் ஆயுதப்பூஜையையொட்டி வரும் அக்டோபர் மாதம் 19-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் திட்டமிட்டபடி படத்தை வெளியிட படக்குழு தீவிரமாக பணியாற்றி வருகிறது. சமீபத்தில் படப்பிடிப்பு முழுவதும் நிறைவுபெற்ற நிலையில் தற்போது முழு வீச்சில் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. 

அதேநேரம் இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை தென் மாவட்டங்களில் நடத்த முடிவு செய்திருந்தனர். அதன்பிறகு துபாயில் நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் தவிர்க்க முடியாத காரணங்களால் நிகழ்ச்சி மலேசியாவிற்கு மாற்றப்பட்டது. அதனால் வேகமாக நடைபெற்ற வந்த நிலையில் தற்போது சென்னையிலேயே நடத்தி விடலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாம். அதன்படி வரும் அக்டோபர் வரும் 5-ஆம் தேதி சென்னையில் பிரம்மாண்டமாக ஆடியோ விழா நடைபெறும் என கூறப்படுகிறது.  

Share this story