மலேசியாவில் ‘லியோ’ ஆடியோ லாஞ்ச்... அட்டகாசமாக வெளியான அப்டேட் !

leo

 விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘லியோ’ படத்தின் ஆடியோ லாஞ்ச் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. 

முழுக்க முழுக்க கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘லியோ’. தளபதி விஜய்யின் மாஸாக நடிப்பில் உருவாகி வரும் இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் இந்த படத்திற்கு அனிரூத் இசையமைத்து வருகிறார். 

leo

இந்த படத்தில் சஞ்சய் தத், திரிஷா, கௌதம் மேனன், மிஷ்கின், அர்ஜூன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு காஷ்மீர், சென்னை, ஆந்திரா உள்ளிட்ட இடங்களில் பல கட்டங்களாக நடைபெற்றது. இதையடுத்து தயாரிப்பு பணிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் பாலிவுட் நடிகர் சஞ்சய் மற்றும் நடிகர் அர்ஜூன் ஆகியோரது கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி படத்திற்கான எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது. 

இந்த படம் வரும் அக்டோபர் மாதம் 19-ம் தேதி திரையரங்கில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் ஆடியோ லாஞ்ச் மலேசியாவில் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வரும் அக்டோபர் 5-ஆம் தேதி நடைபெறும் இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் படுவேகமாக நடைபெற்று வருகிறது. 

Share this story