'லியோ' படப்பிடிப்பை முடித்த கெளதம் மேனன்.. புதிய அப்டேட் !

leo

'லியோ' படத்தில் இயக்குனர் கௌதம் மேனன் தனது பகுதி படப்பிடிப்பை முடித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

 லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘லியோ’. இந்த படம் ஆயுதப்பூஜையையொட்டி வரும் அக்டோபர் மாதம் 19-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இதையொட்டி டைட்டில் டீசரும் வெளியாகி படத்திற்கான எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது. 

leo

இந்த படத்தில் சஞ்சய் தத், திரிஷா, கௌதம் மேனன், மிஷ்கின், அர்ஜூன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. 50 நாட்கள் நடைபெறும் என்று கூறப்படும் இந்த படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 500-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கேற்கும் இந்த படப்பிடிப்பில் விஜய் மற்றும் திரிஷா நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. 

சமீபத்தில் விஜய் மற்றும் திரிஷா ஆகியோர் சென்னை திரும்பினர். இந்நிலையில் இயக்குனர் மிஷ்கின் தனது பகுதி படப்பிடிப்பை முடித்த நிலையில், தற்போது இயக்குனர் கெளதம் மேனனும் படப்பிடிப்பை முடித்துளார். இது குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. 

 

Share this story