அனிரூத் இசையில் அதகளம் செய்துள்ள விஜய்.. மாஸான ‘லியோ’ ஃப்ர்ஸ்ட் சிங்கிள் !

leo

 விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘லியோ’ படத்தின் ஃப்ர்ஸ்ட் சிங்கிள் பாடல் வெளியாகியுள்ளது. 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் திரைப்படம் ‘லியோ‘. அப்பா - மகள் பாசத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள கேங்ஸ்டர் படம். ஏற்கனவே லோகேஷின் ‘கைதி’, ‘விக்ரம்’ போன்ற கேங்ஸ்டர் படங்கள் சூப்பர் ஹிட்டடித்துள்ள நிலையில் அதே பாணியில் உருவாகும் இந்த படத்திற்கும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 

leo

இந்த படத்தில் விஜய்யுடன் இணைந்து திரிஷா, சஞ்சய் தத், மிஷ்கின், கௌதம் மேனன், பிரியா ஆனந்த், அர்ஜூன், மன்சூர் அலிகான், சாண்டி உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். வரும் அக்டோபர் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள இந்த படத்தின் பணிகள் திட்டமிட்டபடி நடைபெற்று வருகிறது. ஏற்கனவே காஷ்மீரில் 50 சதவீத படப்பிடிப்பு நிறைவுபெற்ற நிலையில் மீதமுள்ள படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. 

leo

விஜய் பிறந்தநாளையொட்டி நேற்று நள்ளிரவு இப்படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. அதில் ஓநாயுடன் ரத்தம் தெறிக்க விஜய் மாஸான லுக்கில் இருப்பது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்நிலையில் இப்படத்தின் அடுத்த அப்டேட்டாக ‘நா ரெடி’ என்ற முதல் பாடல் வெளியிடப்பட்டுள்ளது. அனிரூத் இசையில் தாறுமாறாக உருவாகியுள்ள இந்த பாடலை விஜய் மற்றும் அசல் கோலார் இணைந்து பாடியுள்ளனர். விஷ்ணு எடவன் எழுதியுள்ள இந்த பாடலுக்கு தினேஷ் மாஸ்டர் நடனம் அமைத்துள்ளார். இந்த பாடல் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.  

Share this story