போடு... மாஸாக வெளியாகும் 'லியோ' ஃப்ர்ஸ்ட் சிங்கிள்.‌‌. விஜய் பிறந்தநாளில் காத்திருக்கும் சர்ப்ரைஸ் !

leo

 விஜய் பிறந்தநாளையொட்டி 'லியோ' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் வெறித்தனமாக உருவாகிறது ‘லியோ’. ஆயுதப்பூஜையையொட்டி வரும் அக்டோபர் மாதம் 19-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பை திட்டமிட்டபடி முடிக்க இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வேகமாக பணியாற்றி வருகிறார். 

leo

இந்த படத்தில் சஞ்சய் தத், திரிஷா, கௌதம் மேனன், மிஷ்கின், அர்ஜூன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் கடும் குளிரில் நடைபெற்றுள்ளது. இதையடுத்து அடுத்தக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. விஜய்யின் பிறந்தநாளையொட்டி இந்த பாடல் வரும் ஜூன் 22-ஆம் தேதி வெளியிடப்பட இருக்கிறது.‌ இந்த அறிவிப்பையொட்டி விஜய் மாஸாக வாயில் சிகரெட் வைத்திருக்கும் போஸ்டர் ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.  இந்தப் பாடலை நடிகர் விஜய் பாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Share this story