இரட்டை வேடத்தில் விஜய்.. வேற லெவலில் உருவாகும் ‘லியோ’ !

leo

‘லியோ’ படத்தில் நடிகர் விஜய் இரட்டை வேடத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘லியோ’. ஆக்‌ஷன் த்ரில்லர் கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. அனிரூத்தின் வெறித்தனமான பின்னணி இசையில் இப்படம் உருவாகி வருகிறது. இப்படம் ஆயுதப்பூஜையையொட்டி வரும் அக்டோபர் மாதம் 19-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

leo

இந்த படத்தில் நடிகர்கள் சஞ்சய் தத், கெளதம் மேனன், திரிஷா, ப்ரியா ஆனந்த், மிஷ்கின், மன்சூர் அலிகான், அர்ஜூன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்றது. இதில் படத்தின் முக்கிய காட்சிகள் 50 சதவீதம் எடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அடுத்தக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் தற்போது நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில் இப்படத்தில் நடிகர் விஜய் இரட்டை வேடத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. லியோ மற்றும் பார்த்திபன் என இரண்டு கதபாத்திரங்களில் நடிக்கும் அவர்களுக்கு திரிஷா மற்றும் ப்ரியா ஆனந்த் ஆகிய இருவரும் ஜோடியாக நடிக்கின்றனர். இந்த தகவல் ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

Share this story