'லியோ' சிஜி வெர்க்.. கோடிகளை கொட்டும் லோகேஷ் கனகராஜ் !
'லியோ' படத்தின் கிராபிக்ஸ் பணிகளுக்காக பல கோடிகளை செலவு செய்யப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘லியோ’. இந்த படம் ஆயுதப்பூஜையையொட்டி வரும் அக்டோபர் மாதம் 19-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்திற்கு அனிரூத் இசையமைத்து வருகிறார்.
இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக திரிஷா கதாநாயகியாக நடித்து வருகிறார். இவர்களுடன் சஞ்சய் தத், கௌதம் மேனன், மிஷ்கின், அர்ஜூன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் 50 நாட்கள் நடைபெற்றுள்ளது. இதையடுத்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு வரும் மே 5-ஆம் தேதி சென்னையில் தொடங்கவுள்ளது.
இந்த படம் சுமார் 375 கோடி பட்ஜெட்டில் மிகவும் பிரமாண்டமாக உருவாகி வருகிறது. விஜய்யின் கெரியரில் அதிக பட்ஜெட்டில் உருவாகும் படமாக இந்த படம் உள்ளது. இந்நிலையில் இந்த படம் குறித்து முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி 'லியோ' என்றால் சிம்ம ராசியை குறிக்கும். அதனால் சிங்கம் போன்று ஒரு உருவத்தை கிராபிக்ஸில் படக்குழு உருவாக்கி வருகிறது. இதற்காக 15 கோடி ரூபாய் செலவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. கிராபிக்ஸ் பணிகளுக்காக அதிக அளவு பணம் பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டிருப்பது எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.