இரு பாகங்களாக உருவாகும் ‘லியோ’... லோகேஷின் மாஸ்டர் பிளான் இதுதான் !

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் 'லியோ' திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்திற்கு அனிரூத் இசையமைத்து வருகிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக திரிஷா கதாநாயகியாக நடித்து வருகிறார். இவர்களுடன் சஞ்சய் தத், கௌதம் மேனன், மிஷ்கின், அர்ஜூன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
இந்த படம் ஆயுதப்பூஜையையொட்டி வரும் அக்டோபர் மாதம் 19-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் சஞ்சய் தத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஏற்கனவே காஷ்மீர், சென்னை, ஆந்திரா ஆகிய இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.
சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவுபெற்றுவிட்டதாக அறிவிக்கப்பட்ட நிலையில் மீண்டும் படக்குழுவினர் காஷ்மீர் சென்று சில காட்சிகளை படமாக்கி வருகின்றனர். இந்நிலையில் ‘லியோ’ திரைப்படம் இரு பாகங்களாக உருவாகி வருவதாகவும், வரும் 2025-ஆம் ஆண்டு இரண்டாம் பாகம் வெளியாகும் என தகவல் கசிந்துள்ளது. நிச்சயம் இந்த படம் LCU -ல் கனெக்ட்டாகியுள்ளதாகவும், ரஜினியின் 170வது படத்துடன் இந்த கதைக்களம் நிறைவு பெறும் என கூறப்படுகிறது. இதையடுத்து ‘கைதி 2’ படத்தை லோகேஷ் இயக்குவார் என கூறப்படுகிறது.