8 நிமிட இடைவேளை தெறிக்கும்... 'லியோ' தயாரிப்பாளரின் மாஸ் அப்டேட் !

vijay

'லியோ' படத்தை பார்த்த தயாரிப்பாளர் லலித்குமார் ரசிகர்களுக்கு மாஸ் அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளார். 

மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் உருவாகி வருகிறது விஜய்யின் 'லியோ' திரைப்படம். இந்த படத்தில் ஒவ்வொரு அப்டேட்டிற்காகவும் ரசிகர்கள் வெறித்தனமாக காத்திருக்கின்றனர். ஏற்கனவே சஞ்சத் மற்றும் அர்ஜூன் ஆகிய இருவரின் பிறந்தநாளையொட்டி கிளிம்ப்ஸ் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. 

‌ இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்திற்கு அனிரூத் இசையமைத்து வருகிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக திரிஷா கதாநாயகியாக நடித்து வருகிறார். இவர்களுடன் சஞ்சய் தத், கௌதம் மேனன், மிஷ்கின், அர்ஜூன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். 

இந்த படம் ஆயுதப்பூஜையையொட்டி வரும் அக்டோபர் மாதம் 19-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் மாஸ் அப்டேட் ஒன்றை தயாரிப்பாளர் லலித்குமார் வெளியிட்டுள்ளார். இது குறித்து பேசியுள்ள அவர், விஜய்யின் திரைப்பயணத்தில் 'லியோ' திரைப்படம் சிறந்த படமாக இருக்கும். படத்தின் 8 நிமிட இடைவேளை காட்சியை பார்த்தபோது எங்களுக்கே கூஸ்பம்ப்ஸ் ஆனது. கண்டிப்பாக படத்தை ரசிகர்கள் திரையரங்குகளில் கொண்டாடுவார்கள் என்று கூறியுள்ளார்.

 

Share this story