‘லியோ‘ ப்ரோமோ இப்படியொரு சாதனையா ?... அப்போ படம் வந்தா.. மகிழ்ச்சியில் ரசிகர்கள் !

leo

விஜய்யின் ‘லியோ’ டைட்டில் ப்ரோமோ யூடியூப்பில் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது. 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘லியோ’. ‘மாஸ்டர்’ படத்தின் வெற்றிக்கு பிறகு லோகேஷ் மற்றும் விஜய் கூட்டணி இணைந்துள்ளது மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படம்   ஆயுதப்பூஜையையொட்டி வரும் அக்டோபர் மாதம் 19-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

leo

இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. 60 நாட்கள் நடைபெறும் இந்த படப்பிடிப்பு காஷ்மீர் மாநிலம் பகல்ஹாம் பகுதியில் நடைபெற்று வருகிறது. இன்னும் சில நாட்களில் இந்த படத்தின் காஷ்மீர் படப்பிடிப்பு நிறைவுபெற உள்ளது. இதையடுத்து சென்னையில் தொடங்கும் படப்பிடிப்பு சில நாட்கள் நடைபெறுகிறது. அதன்பிறகு ஒட்டுமொத்த படப்பிடிப்பும் நிறைவுபெற்று விடும். 

இந்த படத்தில் சஞ்சய் தத், திரிஷா, கௌதம் மேனன், மிஷ்கின், அர்ஜூன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் இந்த படத்தின் அறிவிப்பையொட்டி டைட்டில் ப்ரோமோ வெளியிடப்பட்டுள்ளது. தற்போது இந்த ப்ரோமோ யூடியூப்பில் 5 கோடி பார்வையாளர்களை கடந்துள்ளது. இது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. ப்ரோமோவிற்கே இப்படியென்றால் அப்போ படம் ரிலீசானால் என்னவாகும் என கருத்துக்கள் பகிரப்பட்டு வருகிறது. 

Share this story