‘லியோ’-ல் இணைந்த சஞ்சய் தத்... படமாகும் முக்கிய காட்சிகள் !

leo

 விஜய்யின் ‘லியோ’ படத்தின் படப்பிடிப்பில் நடிகர் சஞ்சத் தத் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் ‘லியோ’ திரைப்படம் உருவாகி வருகிறது. பொதுவாக லோகேஷ் கனகராஜ் திரைப்படம் ரசிகர்களிடையே புதிய அனுபவத்தை தந்து வருகிறது. ஆனால் இந்த படம் வழக்கமான படம் போன்று இல்லாமல் இன்னும் சுவாரஸ்சியமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. அதற்கான மிகுந்த சிரமம் எடுத்து இந்த படத்தை எடுத்து வருகிறார். 

leo

தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் கடும் குளிரில் நடைபெற்று வருகிறது. 60 நாட்கள் திட்டமிடப்பட்டுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இப்படத்தில் தங்களது பகுதி படப்பிடிப்பு இயக்குனர்கள் மிஷ்கின் மற்றும் கௌதம் மேனன் ஆகிய இருவரும் நிறைவு செய்தனர். 

leo

இதையடுத்து இப்படத்தில் மலையாள நடிகர் பாபு ஆண்டனி நேற்று இணைந்தார். இந்நிலையில் இப்படத்தில் முக்கிய வில்லனாக நடிக்கும் சஞ்சய் தத் நேற்று படப்பிடிப்பில் இணைந்தார். அவர் நடிக்கும் முக்கிய காட்சிகள் இன்று படமாக்கப்பட்டு வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பில் இணைவதற்கு முன்னர் காஷ்மீர் விமான நிலையத்தில் படப்பிடிப்பிற்காக சஞ்சத் தத் வரும் காட்சிகள் வெளியாகியுள்ளது.  

 இந்த படம் ஆயுதப்பூஜையையொட்டி வரும் அக்டோபர் மாதம் 19-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்திற்கு அனிரூத் இசையமைத்து வருகிறார். இந்த படத்தில் திரிஷா, கௌதம் மேனன், மிஷ்கின், அர்ஜூன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 


 

Share this story