125 நாள் ஷூட்டிங் நிறைவு... 'லியோ' படக்குழுவினருக்கு நன்றி தெரிவித்த லோகேஷ் கனகராஜ் !

leo

 விஜய் நடிப்பில் உருவாகி வரும் 'லியோ' படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் நிறைவுபெற்றதாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘லியோ’ படத்தில் நடிகர் விஜய் நடித்து வருகிறார். ஆயுதப்பூஜையையொட்டி வரும் அக்டோபர் மாதம் 19-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆக்ஷன் த்ரில்லர் படமாக உருவாகும் இந்த படத்தில் திரிஷா, மிஷ்கின், கௌதம் மேனன், சஞ்சய் தத் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.  

leo

முழுக்க முழுக்க கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகி வரும் இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் 50 நாட்கள் நடைபெற்றது. இதையடுத்து சென்னையில் தொடங்கிய  படப்பிடிப்பு படப்பில் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ஆந்திராவின் தலக்கோணம் பகுதியில் சில நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்றது. 

leo

சமீபத்தில் நடிகர் விஜய் நடித்த காட்சிகளின் படப்பிடிப்பு நிறைவுபெற்றது. இந்நிலையில் இப்படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் நிறைவுபெற்றுள்ளது. இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். அதில் இன்றுடன் லியோ படப்பிடிப்பு நிறைவுபெற்றது.  கடந்த ஆறு மாதமாக இந்த படத்தின் பணிகள் நடைபெற்று வரும் நிலையில்  125 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. இந்த படத்தில் இணைந்திருந்த நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு நன்றி.  இந்த பயணம் எனது மனதிற்கு நெருக்கமாக இருந்தது. உங்களை நினைத்து பெருமை கொள்கிறேன் பாஸ்ஸ் என்று குறிப்பிட்டுள்ளார்.   ‌‌‌‌


 


 

Share this story