விஜய்யின் ‘லியோ’-ல் இருந்து விலகினாரா திரிஷா ... லோகேஷ் கனகராஜூடன் பிரச்சனையா ?

leo

 விஜய்யின் ‘லியோ’ படத்தில் இருந்து நடிகை திரிஷா விலகியதாக தகவல் வெளியாகியுள்ளது. 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘லியோ’. இந்த படம் ஆயுதப்பூஜையையொட்டி வரும் அக்டோபர் மாதம் 19-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இதையொட்டி டைட்டில் டீசரும் வெளியாகி படத்திற்கான எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது. 

leo

இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. 50 நாட்கள் நடைபெறும் என்று கூறப்படும் இந்த படப்பிடிப்புக்காக விஜய், லோகேஷ் கனகராஜ், திரிஷா உள்ளிட்ட படக்குழுவினர் தனி விமானம் மூலம் காஷ்மீர் சென்றனர். தற்போது ஒட்டுமொத்த படக்குழுவினரும் காஷ்மீரில் முகாமிட்டுள்ள நிலையில் நடிகை திரிஷா மட்டும் மூன்றே நாளில் சென்னை திரும்பினார். 

leo

அதேநேரம் சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் இருந்த லியோ படம் குறித்த ரீ ட்வீட்களை டெலிட் செய்தார். இது ரசிகர்களிடையே சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. லோகேஷ் கனகராஜூக்கும் திரிஷா பிரச்சனை ஏற்பட்டதால் காஷ்மீரில் இருந்து நடிகை திரிஷா திரும்பி வந்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் ‘லியோ’ படத்தில் இருந்து திரிஷா விலகிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இது தேவையில்லாத செய்தி என்றும், வதந்தியை பரப்பாதீர்கள் என்று கூறியுள்ளார். 

 

Share this story