பிரம்மாண்டமாக நடைபெற்ற ‘தளபதி 67’ படப்பூஜை.. அசத்தலான வீடியோ வெளியீடு !

thalapathy 67

 விஜய் நடிப்பில் உருவாகும் ‘தளபதி 67’ படத்தின் படப்பூஜை நிகழ்ச்சியின் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. 

thalapathy 67

விஜய்யின் அட்டகாசமான நடிப்பில் உருவாகிறது ‘தளபதி 67’. இன்னும் பெயர் வைக்காத இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜனவரி 2-ஆம் தேதி சென்னையில் தொடங்கியது. இதையடுத்து மிஷ்கின் மற்றும் சாண்டி மாஸ்டர் நடிக்கும் சில காட்சிகள் கொடைக்கானலில் படமாக்கப்பட்டது. 

thalapathy 67

இதைத்தொடர்ந்து தற்போது விஜய் உள்ளிட்ட படக்குழுவினர் காஷ்மீர் விரைந்துள்ளனர். அங்கு 50 நாட்கள் வரை படப்பிடிப்பு நடைபெறவுள்ளது. இதில் விஜய் நடிக்கும் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட உள்ளது. இந்த படப்பிடிப்பில் கலந்துக்கொள்ள நடிகை திரிஷா, பிரியா ஆனந்த் உள்ளிட்டோர் சென்றுள்ளனர். 

thalapathy 67

இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று முன்தினம் வெளியான நிலையில் படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் குறித்த அறிவிப்பு நேற்று மாலை முதல் வெளியாகி வருகிறது. அதன்படி பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், நடிகை திரிஷா, அர்ஜூன், மிஷ்கின், கௌதம் மேனன், சாண்டி மாஸ்டர், பிரியா ஆனந்த், மலையாள இளம் நடிகர் மேத்யூ தாமஸ் உள்ளிட்டோர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 

thalapathy 67

இந்நிலையில் இப்படத்தின் படப்பூஜை நிகழ்ச்சி கடந்த மாதம் நடைபெற்றது. இதில் விஜய், திரிஷா, இயக்குனர் லோகேஷ் கனகராஜ், இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், தயாரிப்பாளர் லலித், மன்சூர் அலிகான், பிரியா ஆனந்த் ஆகியோர் கலந்துக்கொண்டனர். தற்போது இந்த நிகழ்வின் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. அசத்தலான உள்ள அந்த வீடியோ இணையத்தை கலக்கி வருகிறது. 

thalapathy 67

thalapathy 67

thalapathy 67

Share this story