விஜய் நடிக்கும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் .... புதிய போஸ்டர் வெளியீடு...

விஜய் நடிக்கும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் .... புதிய போஸ்டர் வெளியீடு... 

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வருகிறார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு  the Greatest Of All Time என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. யுவன் சங்கர் ராஜா படத்திற்கு இசை அமைக்கிறார். இதில் விஜய் 2 வேடங்களில் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பாக சென்னையில் பூஜையுடன் தொடங்கியது. இப்படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, சினேகா, லைலா, ஜெயராம் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். முன்னதாக இப்படத்தின் கிராபிக்ஸ் பணிகளுக்காக விஜய், வெங்கட் பிரபு உள்ளிட்ட படக்குழு அமெரிக்கா சென்றது. அங்கு படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து, தற்போது அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

விஜய் நடிக்கும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் .... புதிய போஸ்டர் வெளியீடு... 

இந்நிலையில், பொங்கல் பண்டிகையை ஒட்டி படக்குழு புதிய போஸ்டரை பகிர்ந்துள்ளது. அதில் பிரபுதேவா, பிரசாந்த் மற்றும் அஜ்மல் ஆகியோர் விஜய்யுடன் இருப்பது போல அமைந்துள்ளது. 

Share this story