‘லியோ’ ப்ரீ ரிலீசே இந்தனை கோடிகளா ?..வாயை பிளக்கும் தென்னிந்திய சினிமா !

leo

விஜய்யின் ‘லியோ‘ படத்தின் ப்ரீ ரிலீஸ் வியாபாரம் 400 கோடியை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘லியோ‘. இந்த படம் ஆயுதப்பூஜையையொட்டி வரும் அக்டோபர் மாதம் 19-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

leo

உச்சக்கட்ட எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படத்தின் ப்ரீ ரிலீஸ் வியாபாரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இந்த படத்தின் ஓடிடி உரிமையை 120 கோடிக்கு நெட் ஃப்ளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. அதேபோன்று தொலைக்காட்சி உரிமையை 70 கோடிக்கு சன் டிவி பெற்றுள்ளது. 

மேலும் பாடல்களுக்கான உரிமையை 18 கோடிக்கு சோனி மியூசிக் நிறுவனம் பெற்றுள்ளது. இந்தி டப்பிங் உரிமை 30 கோடிக்கு பெறப்பட்டுள்ளது. இதுதவிர திரையரங்கு உரிமை 175 கோடி விற்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இப்படி அனைத்து சேர்த்தால் மொத்தம் 400 கோடிக்கு மேல் ப்ரீ ரிலீஸ் வசூல் இருக்கிறது. படம் ரிலீசாவதற்கு முன்னரே இவ்வளவு பெரிய சாதனையை ‘லியோ’ திரைப்படம் செய்தது படக்குழுவினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாம். 

 

 

Share this story