மிரட்டலாக உருவாகும் தளபதி ‘67’... விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு !

thalapathy 67

விஜய் நடிப்பில் உருவாகும் ‘தளபதி 67’ படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

‘வாரிசு’ படத்திற்கு முழுக்க முழுக்க கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகும் படத்தில் நடிகர் விஜய்  நடிக்கவுள்ளார். இந்த படத்தை ‘மாநகரம்’, ‘கைதி’, ‘மாஸ்டர்’, ‘விக்ரம்’ படத்திற்கு லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளதால் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

லலித் குமாரின் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் ‘தளபதி 67’ படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ளது. இது குறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாஸ்டர், வாரிசு ஆகிய படங்களின் வெற்றிக்கு பிறகு மூன்றாவது முறையாக விஜய்யுடன் இணைகிறோம். 

lokesh kanagaraj

தற்காலிகமாக ‘தளபதி 67’ அழைக்கப்படும் இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜனவரி 2-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. ‘மாஸ்டர்’ படத்தின் வெற்றிக்கு விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் கூட்டணி இரண்டாவது முறையாக இணைந்துள்ளது. 

கைதி, மாஸ்டர், பீஸ்ட் ஆகிய படங்களின் சூப்பர் ஹிட் வெற்றிக்கு பிறகு இந்த படத்திற்கு அனிரூத் இசையமைக்கவுள்ளார். மனோஜ் பரம்மஹம்சா ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு பிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்கிறார். அன்பறிவு சகோதரர்கள் இப்படத்திற்கு சண்டைப்பயிற்சி அளிக்கின்றனர். 

lokesh kanagaraj

இந்த படத்தில லோகேஷ் கனகராஜ், ரத்னகுமார், தீரஜ் வைத்தி ஆகியோர் இணைந்து வசனம் எழுதியுள்ளனர். விரைவில் இப்படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் குறித்து அறிவிப்பு வெளியிடப்படும். உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றி என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதற்கிடையே இந்த படத்தில் நடிகை திரிஷா கதாநாயகியாக நடிப்பதாக கூறப்படுகிறது. இவர்களுடன் சஞ்சய் தத், கெளதம் மேனன், மன்சூர் அலிகான், அர்ஜூன், மிஷ்கின் ஆகியோர் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் கசிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 


 

Share this story