விஜய்க்கு ஜோடியாகும் தனுஷ் பட நடிகை... 'தளபதி 68' புதிய அப்டேட் !

thalapathy 68

 விஜய் மற்றும் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் ஹீரோயின் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

 ‘லியோ’ படத்தை முழுவதும் முடித்துள்ள நடிகர் விஜய், அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கவுள்ளார். பான் இந்தியா திரைப்படமாக உருவாகும் இந்த படத்தை அடுத்த ஆண்டு தீபாவளிக்கு வெளியிட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளது. ‘தளபதி 68’ என்று தற்காலிகமாக அழைக்கப்படும் அந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ளது. 

thalapathy 68

இந்த படத்தில் சர்வதேச கலைஞர்கள் பணியாற்றவுள்ளனர். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். முதற்கட்ட பணிகள் நடைபெற்று வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் அல்லது நவம்பர் மாதம் தொடங்கும் என கூறப்படுகிறது. இந்த படத்திற்கான ப்ரீ புரொடக்ஷன் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. ‘லியோ’ படத்தின் ரிலீசுக்கு பிறகுதான் இந்த படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகும்.

thalapathy 68

முதலில் இந்த படம் அரசியல் படம் என்று கூறப்பட்ட நிலையில் வெங்கட் பிரபுவின் வழக்கமான என்டர்டெயினர் படமாக இருக்கும் என கூறப்படுகிறது. இந்த படத்திற்கு 'கேப்டன் மில்லர்' படத்தில் பணியாற்றிய சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவாளராக பணியாற்றவுள்ளார். இந்நிலையில் இப்படத்தின் கதாநாயகியாக பிரியங்கா அருள் மோகன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே 'டாக்டர்',  'எதற்கும் துணிந்தவன்', 'கேப்டன் மில்லர்' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Share this story