ஆக.25-ல் 25வது திருமண தினத்தை கொண்டாடவுள்ள விஜய்... வைரலாகும் கல்யாண பத்திரிகை!

Vijay sangeetha

நடிகர் விஜய் தனது ரசிகையாக லண்டனை சேர்ந்த சங்கீதா என்பவரை திருமணம் செய்துகொண்டார். விஜய் சங்கீதாவின் திருமண அழைப்பிதழ் தற்போது இணையத்தில் மிகவும் வைரலாகி வருகிறது.தமிழ் சினிமாவின்  பிரபல நடிகர் விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கியுள்ள ‘கோட்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். விஜய்யின் ‘கோட்’ திரைப்படம் வருகிற செப்டம்பர் 5 ஆம் தேதி உலகளவில் உள்ள திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. தவெக கட்சி தலைவராக பொறுப்பு வகிக்கும் நடிகர் விஜய் 2026 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை டார்கெட்டாக வைத்து விரைவில் முழு நேர மக்கள் பணியில் ஈடுபட உள்ளார்.

Inivitation

இதனால் நடிகர் விஜய் தனது ‘தளபதி 69’ படத்துடன் சினிமாவை விட்டு முற்றிலுமாக விலக முடிவெடுத்துள்ளார். இவரின் கடைசி படத்தை இயக்குநர் எச். வினோத் இயக்கவுள்ளார். இது ஒரு பக்கம் இருக்க,  நடிகர் விஜய் தனது ரசிகையாக லண்டனை சேர்ந்த சங்கீதா என்பவரை 1999 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டதை நம்மில் பலரும் அறிவோம்.

invitation

விஜய் சங்கீதா தம்பதி சஞ்சய் என்ற மகனும் ஷாலினி என்ற மகளும் உள்ளனர். சஞ்சய் தற்போது தனது முதல் படத்தை இயக்கும் பணியில் மும்மரமாக ஈடுபட்டிட்டு வருகிறார். விஜய்-சங்கீதா தம்பதி, ஆகஸ்ட் 25-ம் தேதி தங்களின் 25வது திருமண ஆண்டை கொண்டாட உள்ள நிலையில், திருமண அழைப்பிதழ் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Share this story