மாயாண்டி குடும்பத்தார் 2-ம் பாகத்தை இயக்கும் விஜய் பட இயக்குனர்

மாயாண்டி குடும்பத்தார் 2-ம் பாகத்தை இயக்கும் விஜய் பட இயக்குனர்

2009-ம் ஆண்டு ராசு மதுரவன் இயக்கத்தில் வெளியான மாயாண்டி குடும்பத்தார் பிளாக்பாஸ்டர் வெற்றி பெற்றது. மணிவண்ணன், தருண் கோபி, பொன்வண்ணன், நந்தா பெரியசாமி, சீமான், கே.பி ஜெகன், ரவிமரியா, சிங்கம்புலி என இயக்குனர் பட்டாளமே நடிகர்களாக இந்தப் படத்தில் ஒன்றிணைந்தனர். இப்படம் குடும்பங்களால் கொண்டாடப்பட்டது. முதல் பாகத்தை தயாரித்த யுனைடெட் ஆர்ட்ஸ்  நிறுவனம் இரண்டாம் பாகத்தையும் தயாரிக்கிறது. கதை திரைக்கதை வசனம் எழுதி கே பி ஜெகன் இப்படத்தை இயக்க உள்ளார். முதல் பாகத்தில் நடித்த அதே நடிகர், நடிகைகள் இரண்டாம் பாகத்திலும் நடிக்கின்றனர். 

இயக்குனர் கே.பி.ஜெகன் 'மாயாண்டி குடும்பத்தார்' திரைப்படத்தில் மாயாண்டி எனும் கதாபாத்திரத்தின் மகன்களில்  ஒருவராக நடித்திருந்தார். மேலும் இவர் விஜய்யின் புதிய கீதை, கோடம்பாக்கம் உள்ளிட்ட சில படங்களை இயக்கி இருக்கிறார். 

Share this story