காவல் அதிகாரியாக நடிக்கும் விஜய் - தளபதி 69 அப்டேட்

vijay

தளபதி விஜய் நடிக்க இருக்கும் 69வது திரைப்படத்தின் பூஜை சமீபத்தில் நடந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பும் தொடங்கி முதல் கட்ட படப்பிடிப்பில் ஒரு பாடல் காட்சி படமாக்கப்பட்டதாக செய்திகள் வெளியானது. இந்த நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பு தமிழக வெற்றி கழகத்தின் மாநாடு முடிவடைந்ததும் தொடங்கும் என்று கூறப்பட்டு வரும் நிலையில் தற்போது இந்த படத்தின் கதை மற்றும் விஜய்யின் கேரக்டர் குறித்த தகவல் கசிந்து உள்ளது. விஜய்யின் கேரக்டர் இந்த படத்தில் காவல்துறை அதிகாரியாக இருந்து ஏதோ ஒரு காரணத்தினால் காவல் துறையிலிருந்து விலகிய நிலையில் பின்னர் மீண்டும் ஒரு முக்கிய பணிக்காக காவல்துறையிடம் இணைய இருப்பதாகவும் அதன் பிறகு அந்த முக்கிய பணி என்ன என்பதுதான் கதை என்றும் கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே எச் வினோத் இயக்கத்தில் உருவான ’தீரன் அதிகாரம் ஒன்று’ என்ற படமும் காவல்துறை சம்பந்தப்பட்ட படம் என்பதால் இன்னொரு தீரனை எதிர்பார்க்கலாமா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இது ஒரு சாதாரண காவல் துறை சம்பந்தப்பட்ட கதையாக மட்டும் இல்லாமல் ஒரு வலிமையான சமூக கருத்தும் இந்த படத்தில் வினோத் கூற இருப்பதாகவும் எனவே இது ஒரு வழக்கமான விஜய் படமாக இல்லாமல் வித்தியாசமாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய் ஜோடியாக பூஜா நடிக்க  இருக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார். இந்த படத்தின் வில்லனாக பாபி தியோல் நடிக்கவிருக்கும் நிலையில் மமிதா பாஜு, பிரியாமணி, கௌதம் மேனன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் நடிக்கவுள்ளனர். மேலும் இந்த படத்தின் ஒளிப்பதிவாளராக சத்யன் சூரியன், ஸ்டண்ட் இயக்குனராக அனல் அரசு, கலை இயக்குனராக செல்வகுமார், படத் தொகுப்பாளராக பிரதீப் ராகவ், உடை வடிவமைப்பாளராக பல்லவி, பப்ளிசிட்டி டிசைனராக கோபி பிரசன்னா ஆகியோர் பணிபுரிந்து வருகின்றனர்.

Share this story