மாஸ் தெலுங்கு இயக்குனருடன் இணையும் விஜய்... சூடுபறக்கும் ‘தளபதி 68’ அப்டேட் !

telugu director Gopichand Malinen

 நடிகர் விஜய்யின் அடுத்த படத்தின் இயக்குனர் குறித்த புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. 

தமிழ் சினிமாவில் டாப் நடிகராக இருக்கும் விஜய், தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘லியோ’ படத்தில் நடித்து வருகிறார். மிரட்டலான கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நிறைவுபெற்றுள்ள நிலையில் தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. 

telugu director Gopichand Malinen

‘லியோ’ படத்திற்கு முன்னரே விஜய் நடிப்பில் உருவான திரைப்படம் ‘வாரிசு’. முதல்முறையாக தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் வெளியான இப்படம் குடும்ப பின்னணியில் உருவாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்திற்கு தெலுங்கில் வரவேற்பு கிடைத்துள்ளதால் இரு மொழிகளில் நடிக்க விஜய் ஆர்வம் காட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

telugu director Gopichand Malinen

அதனால் ‘வாரிசு’ படத்திற்கு பிறகு மீண்டும் தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் உருவாகும் படத்தில் விஜய் நடிக்கவுள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்காக விஜய்க்கு ஒரு தொகையை அட்வான்ஸாக கொடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் கோபிசந்த் மலினேனி இயக்கவுள்ளார்‌. சமீபத்தில் தெலுங்கில் பாலகிருஷ்ணா நடிப்பில் சூப்பர் ஹிட்டடித்த 'வீர சிம்ஹா ரெட்டி' படத்தை இயக்கியவர் கோபிசந்த் மலினேனி என்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.  

Share this story