வித்தியாசமான நடிப்பில் விஜய் தேவரகொண்டா-கிங்டம் படம் வெற்றி பெறுமா ?

kingdom
கிங்டம் டிரெய்லர், டீசர்களுக்கு அமோக வரவேற்பு கிடைத்தது. நல்ல எதிர்பார்ப்புடன் இந்தப் படம் திரைக்கு வந்துள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.இந்த படம் பற்றி ரசிகர்கள் என்ன சொல்கிறார்கள் என்று இப்பதிவில் நாம் காணலாம் 
கிங்டம் கதை பிரிட்டிஷ் காலகட்டப் பின்னணியில் மிகவும் சுவாரஸ்யமாகத் தொடங்குகிறது. முதல் பாதி நன்றாக இருக்கிறது என்று நெட்டிசன்கள் ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர். முதல் 30 நிமிடங்கள் இயக்குநர் மெதுவாகக் கதையைக் கட்டமைத்து அந்த உலகத்திற்குள் நம்மைக் கொண்டு செல்கிறார். விஜய் தேவரகொண்டா ஒவ்வொரு காட்சியிலும் தனது நடிப்பால் கட்டிப்போடுகிறார்.
விஜய் தேவரகொண்டாவின் கடந்த காலப் படங்களை விட இந்தப் படத்தில் அவரது நடிப்பு சற்று வித்தியாசமாக இருக்கிறது. உடல்மொழியிலும் மாற்றங்களைக் காணலாம். அனிருத் அளித்துள்ள பின்னணி இசை அருமையாக இருப்பதாக ரசிகர்கள் கூறுகின்றனர். சத்யதேவ், விஜய் தேவரகொண்டா இடையேயான உணர்ச்சிமிகு காட்சிகள் சிறப்பாக அமைந்துள்ளதாகக் கூறுகின்றனர். இந்தப் படத்தின் மூலம் விஜய் தேவரகொண்டா முதிர்ச்சியடைந்த நடிகராக மாறியுள்ளதாக ரசிகர்கள் பாராட்டுகின்றனர்.

Share this story