கோலாகலமாக நடந்த ‘குக்வித் கோமாளி புகழ்’ மனைவியின் ‘வளைகாப்பு’ வைபவம்.

photo

விஜய் டிவி பிரபலம் புகழின் மனைவிக்கு பிரம்மாண்டமாக வளைகாப்பு நிகழ்ச்சி இன்று நடந்துள்ளது. இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைராகி வருகிறது.

photo

விஜய் டிவியின்குக் வித் கோமாளிநிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகர் புகழ். தனது தனித்துவமான காமெடியால் ரசிகர்களை கவர்ந்தார். பல நிகழ்ச்சிகளில் பங்கேற்று ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தும் வருகிறார். அதுமட்டுமல்லாமல் சினிமாவிலும் நடித்து வருகிறார். அந்த வகையில் அஜித்துடன் 'வலிமை', சூர்யாவுடன் 'எதற்கும் துணிந்தவன்' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்


 

‘ஜூ கீப்பர்’ எனும் படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார் புகழ். இவர் தனது நீண்ட நாள் காதலியான பென்சியாவை கடந்த ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.  இந்த நிலையில் புகழின் மனைவி பென்சியாவிற்கு இன்று கோலாகலமாக வளைகாப்பு நிகழ்ச்சி நடந்துள்ளது. இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. ஷிவாங்கியும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட புகைப்படம் மற்றும் வீடியோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Share this story