வசூல் வேட்டையில் 'வாரிசு'... 5 நாட்களில் இத்தனை கோடிகளா ?

varisu

விஜய்யின் 'வாரிசு' திரைப்படம் 5 நாட்களில் 150 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

விஜய் நடிப்பில் தெலுங்கு இயக்குனர் வம்சி படைப்பள்ளி இயக்கத்தில் கடந்த 11-ஆம் தேதி பொங்கலையொட்டி வெளியான திரைப்படம் 'வாரிசு'. இந்தப் படம் விஜய்யின் வழக்கமான ஆக்சன் படமாக இல்லாமல் ஃபேமிலி சென்டிமென்டில் உருவாகி வெளியாகி உள்ளது. திரையரங்குகளில் வெளியாகியுள்ள இப்படத்திற்கு ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் வரவேற்பு தெரிவித்துள்ளனர். 

varisu

இந்தப் படத்தில் ராஷ்மிகா மந்தனா,  சரத்குமார், பிரகாஷ்ராஜ், யோகிபாபு, ஜெயசுதா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தில் நடிகர் விஜய் ஒன்மேன் ஷோவாக கலக்கியுள்ளார். அதனால் இந்த படத்தை குடும்பம் குடும்பமாக சென்று பொதுமக்கள் பார்த்து வருகின்றனர். 

இப்படத்திற்கு சில நெகட்டிவ் விமர்சனங்களும் கொடுக்கப்பட்டு வரும் நிலையில் 'வாரிசு' திரைப்படம் வசூல் வேட்டை நடத்தி வருகிறது‌. இந்தப் படம் முதல் நாளில் 19.43 கோடி ரூபாய் வசூல் சாதனை செய்ததது. இந்நிலையில் இப்படம் சுமார் 150 கோடி ரூபாய் வசூலித்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 5 நாளில் இந்த சாதனையை வாரிசு திரைப்படம் பெற்றுள்ளதால் விஜய் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

Share this story