ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்ற ‘ரஞ்சிதமே’ பாடல்.. புதிய சாதனை படைத்த ‘வாரிசு’

Ranjithame

விஜய்யின் ‘வாரிசு’ படத்தின் ரஞ்சிதமே பாடல் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது. 

தெலுங்கு இயக்குனர் வம்ஷி படைப்பள்ளி மற்றும் விஜய் கூட்டணியில் எதிர்பார்ப்பை எகிற வைக்கும் திரைப்படம் ‘வாரிசு’. தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் உருவாகும் இப்படத்தை தில் ராஜூவின் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படம் விஜய்யின் வழக்கமான ஆக்ஷன் படம் போன்று இல்லாமல் குடும்ப சென்டிமெண்ட்டில் உருவாகி வருகிறது.

Ranjithame

இந்த படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இந்த படத்தில் நடிகர்கள் சரத்குமார், ஷ்யாம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வரும் இந்த படத்திற்கு தமன் இசையமைத்து வருகிறார்.  இந்த படம் வரும் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் இப்படத்தில் விஜய் பாடிய ‘ரஞ்சிதமே’ பாடல் கடந்த நவம்பர் 6-ஆம் தேதி வெளியானது. இந்த பாடல் வெளியாகி ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. யூடியூப்பில் இப்பாடலை 60 மில்லியன் பார்வையாளர்கள் பார்த்துள்ளனர். இது படக்குழுவினரை உற்சாகப்படுத்தியுள்ளது. 

Share this story