இணையத்தில் லீக்கான ‘வாரிசு’.. அதிர்ச்சியில் படக்குழுவினர் !

varisu

விஜய்யின் ‘வாரிசு’ திரைப்படம் இணையத்தில் லீக்கானதால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

விஜய் மற்றும் வம்ஷி படைப்பள்ளி கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் ‘வாரிசு’. தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் உருவாகியுள்ள இப்படத்தை தில் ராஜூவின் ஸ்ரீ வெங்கடேஷ்வரா நிறுவனம் தயாரித்துள்ளது. பொங்கலை பண்டிகையையொட்டி இப்படம் நேற்று உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியானது. 

varisu

இந்த படம் விஜய்யின் வழக்கமான ஆக்ஷன் படமாக இல்லாமல் குடும்பங்கள் கொண்டாடும் படமாக மாறியுள்ளது. தனது குடும்பம் சிதறாமல் எப்படி ஹீரோ காப்பாற்றுகிறார் என்பதுதான் படத்தின் கதை. இந்த படத்தை திரையரங்குகளில் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். ஒரே நாளில் இந்த படம் தமிழகத்தில் மட்டும் 20 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்துள்ளது. 

varisu

இந்நிலையில் இப்படம் எச்டி பதிப்புகளில் இணையத்தில் கசிந்துள்ளது. இது படக்குழுவினரை அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளது. பிரபல மூவி இணையத்தளங்களான ஃபிலிமிசில்லா, மூவிரூல்ஸ், டெலிகிராம், தமிழ் ராக்கர்ஸ் உள்ளிட்ட தளங்களில் இப்படம் கசிந்துள்ளது.  

 

 

Share this story