தெலுங்கில் ‘வாரிசு’ படத்தை வெளியிடுவதில் சிக்கல்... கடும் நெருக்கடியில் சிக்கிய தயாரிப்பாளர் !

varisu

 விஜய்யின் ‘வாரிசு’ படம் தெலுங்கில் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தொடர்ந்து ஆக்‌ஷன் திரைப்படங்களில் நடித்து வந்த விஜய், ‘வாரிசு’ படத்தின் மூலம் நீண்ட இடைவெளிக்கு பிறகு குடும்ப பின்னணி கொண்ட படத்தில் நடித்துள்ளார். ஸ்ரீ வெங்கடேஷ்வரா நிறுவனம் சார்பில் தில் ராஜூ தயாரிக்கும் இப்படத்தை தெலுங்கு இயக்குனர் வம்ஷி படைப்பள்ளி இயக்கி வருகிறார். தமன் இசையில் பாடல்கள் உருவாகி வருகிறது. 

varisu

தற்போது இறுதிக்கட்ட பணியில் உள்ள இப்படத்தின் டிரெய்லர் மற்றும் ஆடியோ லாஞ்ச் நிகழ்ச்சியை விரைவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் இப்படம் தமிழில் ‘வாரிசு’ என்ற பெயரிலும், தெலுங்கில் ‘வாரசுடு’ என்ற பெயரிலும் வெளியாகவுள்ளது. முதலில் இருமொழிகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட இப்படம் பின்னர் தமிழில் வெளியாகும் என்றும், தெலுங்கில் டப் செய்யப்பட்டு வெளியிடப்படும் என்று கூறப்பட்டுள்ளது. 

varisu

இதற்கிடையே தீபாவளி மற்றும் பொங்கல் போன்ற பெரிய பண்டிகை நாட்களில் தெலுங்கு படங்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படும் என்று தெலுங்கு தயாரிப்பாளர்கள் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியிருந்தது. இந்நிலையில் வரும் பொங்கலுக்கு ‘வாரசுடு’ திரைப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் திரையரங்குகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தற்போது தெலுங்கு தயாரிப்பாளர் சங்க துணை தலைவராக ‘வாரிசு’ படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜூவே இருப்பதால் அவருக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. 

 

 

 

Share this story