மாஸ் காட்டியுள்ளாரா விஜய் ... ‘வாரிசு’ இரண்டாம் பாதி எப்படி இருக்கு ?

vijay

'வாரிசு' படத்தின்  இரண்டாம் பாதி எப்படி இருக்கு என்ற தகவல் வெளியாகியுள்ளது. 

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'வாரிசு' படம் இன்று அதிகாலை 4 மணிக்கு வெளியாகிறது. இதையொட்டி நேற்று இரவு இப்படத்தின் சிறப்புக் காட்சி திரையிடப்பட்டது. இதில் முக்கிய திரைப்பிரபலங்கள் மற்றும் பத்திரிக்கைகள் படத்தை பார்த்தனர். இதையடுத்து அவர்கள் வெளியிட்டுள்ள ட்விட்டர் விமர்சனங்களை பார்க்கலாம். ஏற்கனவே இப்படத்தின் முதல் பாதி விமர்சனம் வெளியான நிலையில் தற்போது இரண்டாம் பாதி விமர்சனம் வெளியாகியுள்ளது. 

vijay

வாரிசு படத்தின் இரண்டாவது பாதி தளபதி ரசிகர்களுக்கு நிச்சயம் விருந்தாக இருக்கும். சண்டைக்காட்சிகள், மாஸ் காட்சிகள், காமெடி மற்றும் விஜய்யின் வாய்ஸ் மாடுலேஷன் ஆகியவை இந்த படத்தில் உள்ளது. நிச்சயம் விஜய் ஆட்டநாயகன் தான். இந்த படம் ஒரு வழக்கமான குடும்ப படமாக உள்ளது. 

 நிச்சயம் இது வாரிசு வெற்றிதான். இந்த படத்தில் நீங்கள் எதிர்பார்த்த அனைத்தையும் இயக்குனர் வம்சி கொடுத்துள்ளார். உணர்வுப்பூர்மான மற்றும் குடும்ப திருவிழாவாக இப்படம் இருக்கும். திரையரங்கில் பெரிய திரையில் பார்க்கும் சில காட்சிகள் இந்த படத்தில் உள்ளது. 


இயக்குனர் வம்சியின் திரைக்கதை சிறப்பாக அமையவில்லை. ‘வாரிசு’ படத்தின் சலிப்பாக இருக்கிறது. இந்த படத்திற்கு 5-க்கு 2.5 மதிப்பெண்களே கொடுக்க முடியும். மொத்தத்தில் இந்த படம் தோல்வியை சந்தித்துள்ளது. 

இந்த படம் ஒரு குடும்ப பொழுதுப்போக்கு படமாக உருவாகியுள்ளது. தளபதி விஜய் ஸ்கிரீன் பிரசன்ஸ் பொருத்தமில்லாமல் இருக்கிறது. விஜய்யின் நடிப்பு படத்திற்கு கூடுதல் சிறப்பு. குடும்பங்கள் பார்க்கும் படமாக இப்படம் இருக்கும். இந்த படம் நல்ல வசூலை குவிக்கும். 


விஜய்யை சரியாக பயன்படுத்தியிருக்கிறார் இயக்குனர் வம்சி. குடும்ப உணர்வுகள், ஆக்‌ஷன், காதல் மற்றும் காமெடி ஆகிய இந்த படத்தில் உள்ளது. மசாலா கலந்து படமாக இருக்கும் இந்த படம் நிச்சயம் வசூலை குவிக்கும். 


 

இந்த படத்திற்கு 5-க்கு 4 மதிப்பெண் கொடுக்கலாம். விஜய் மற்றும் யோகிபாபு இணைந்து நடித்துள்ள காட்சி நன்றாக இருக்கிறது. விஜய்யுடன் ராஷ்மிகா காட்சிகள் ரசிக்கும் வகையில் உள்ளது. விஜய்யின் சகோதரர்களாக நடித்துள்ள ஷ்யாம் மற்றும் ஸ்ரீகாந்தின் நடிப்பு நன்றாக உள்ளது. பிரகாஷ் ராஜ் மற்றும் பிரபுவின் நடிப்பில் சிறப்பாக உள்ளது. நிச்சயம் இந்த படம் குடும்பங்கள் கொண்டாடப்பட வேண்டிய படம். 


 

Share this story