குடும்ப உறவுகள் குறித்து பேசும் விஜய்யின் ‘வாரிசு’... தூள் கிளப்பும் டிரெய்லர் வெளியீடு !

varisu

விஜய்யின் ‘வாரிசு’ படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 

நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒரு வித்தியாசமான கதைக்களத்தில் விஜய் நடித்துள்ளார். குடும்ப உறவுகள் குறித்து இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் வம்ஷி படைப்பள்ளி இயக்கியுள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் உருவாகியுள்ள இந்த படம் வரும் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. 

varisu

தில் ராஜூவின் ஸ்ரீ வெங்கடேஷ்வரா நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ வெளியிடவுள்ளது. இந்த படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் நடிகர்கள் சரத்குமார், ஷ்யாம் பிரபு, பிரகாஷ் ராஜ், ஸ்ரீகாந்த், குஷ்பூ, சங்கீதா, ஜெயசுதா, யோகிபாபு, ஸ்ரீமன், ஜான் விஜய், விடிவி கணேஷ், சஞ்சனா சாரதி, பரத் ரெட்டி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

தற்போது இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. இதில் குடும்ப உறவுகள் குறித்து பேசப்பட்டுள்ளது. வில்லனால் ஒரு குடும்பம் எப்படி உடைகிறது என்றும் அதை சரி செய்ய எப்படி ஹீரோ போடுகிறார் என்பது குறித்து டிரெய்லரில் காட்டப்பட்டுள்ளது. ‘குடும்பம் என்றால் குறை இருக்கதான் செய்யும். நமக்கு இருப்பது ஒரே குடும்பம்’ என்று விஜய் பேசும் வசனங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. 

 

Share this story