விஜய்யின் ‘வாரிசு’ டிரெய்லர் எப்போது ? .. சூப்பர் அப்டேட்

varisu

விஜய்யின் ‘வாரிசு’ படத்தின் டிரெய்லர் குறித்த முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. 

தெலுங்கு இயக்குனர் வம்ஷி படைப்பள்ளி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘வாரிசு’. தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் உருவாகும் இப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த படம் வரும் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

varisu

இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், ஜெயசுதா, பிரபு, யோகிபாபு, பிரகாஷ் ராஜ், ஷாம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். தற்போது இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

சமீபத்தில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி புத்தாண்டையொட்டி இப்படத்தின் டிரெய்லர் வெளியாகும் என தகவல் கசிந்துள்ளது. இதற்காக அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. 

Share this story