11நாட்களில் இத்தனை கோடியா!......- வாய் பிளக்க வைத்த ‘வாரிசு’ பட வசூல் விவரம்.

photo

வாரிசு திரைப்படம் வெளியாகி ரசிகர்களின் பேராதரவோடு வசூலை வாரி குவித்து வருகிறது. இந்த நிலையில் தற்போது படம் வெளியாகி 11 நாட்கள் ஆன நிலையில்  உலகம் முழுவதும் எவ்வளவு வசூலை பெற்றுள்ளது என்ற அதிகாரப்பூர்வ தகவலை படத்தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா வெளியிட்டுள்ளது.

photo

விஜய் பல ஆண்டுகளுக்கு பிறகு குடும்ப சென்டிமென்டில் நடித்துள்ள வாரிசு திரைப்படம் , உலகம் முழுவதும் பல நாடுகளில் வெளியாகி சக்கபோடு போட்டு வருகிறது. தொடர்ந்து படத்தின் வெற்றி விழாகூட படக்குழு கலந்துகொள்ள, கேக் வெட்டி மிக விமர்சையாக கொண்டாடப்பட்டது. அது தொடர்பான புகைப்படங்கல் இணையத்தில் வெளியாகி அதிகம் பகிரப்பட்டது.

photo

இந்தநிலையில் தற்போது வாரிசு திரைப்படம் வெளியான 11 நாட்களிலேயே உலகம் முழுவதும் 250 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளதாக அறிவித்து படக்குழு தரமான போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். இன்னும் நாட்கள் செல்ல செல்ல படத்தின் வசூல் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share this story